தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'நாலு வருஷ ஆசை' - கல்லூரி மாணவிக்கு டேட்டிங் ரெஸ்யூம்... விளையாட்டா சொன்னதற்காக இப்படியா! - guy gave resume for invite girl to dating

மாணவி விளையாட்டாகச் சொன்னதை சீரியசாக எடுத்துக்கொண்ட மாணவனின் டேட்டிங் ரெஸ்யூம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

டேட்டிங்
டேட்டிங்

By

Published : Mar 2, 2020, 11:51 AM IST

மனதிற்குப் பிடித்தவர்களுடன் வெளியே செல்வது பலரின் ஆழ்மனதில் துடித்துக்கொண்டிருக்கும் ஆசை. ஆனால், பயத்தில் அதை வெளிப்படுத்தாமல் விட்டுவிடுவார்கள். இருப்பினும் சிலர் தைரியமாக என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என முயற்சி செய்வார்கள்.

அந்த வகையில், கல்லூரி மாணவியை வெளியே அழைத்த மாணவனிடம் கிண்டலுக்காக, 'வெளியே வர வேண்டும் என்றால் லெட்டர் எழுதி கூப்பிடு' என்று மாணவி கூறியுள்ளார். இதைச் சீரியசாக எடுத்துக்கொண்ட மாணவன், உடனடியாக அடுத்த நாளே மாணவியிடம் கொடுத்துள்ளார். இருப்பினும் அச்செயல் நகைச்சுவையாகத்தான் முடிந்துள்ளது.

மாணவி கேட்டது என்னவோ லெட்டர்; ஆனால் வந்தது என்னமோ ரெஸ்யூம். இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் மாணவி பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. குறிப்பாக அந்த ரெஸ்யூமில், வேலைக்கு சேர என்னவெல்லாம் கூறுவோமோ அதை மிகவும் நகைச்சுவையான முறையில் தெரிவித்திருந்தார் அந்த 'அப்பாவி' மாணவன்.

இதுமட்டுமின்றி தான் வெளிப்படையானவன் என்பதை மாணவி தெரிந்துகொள்ள இதற்கு முன்பு அந்த மாணவன் டேட்டிங் செய்த பெண்களின் பெயர்களையும் அந்த ரெஸ்யூமில் குறிப்பிடப்பட்டிருந்ததுதான் அல்டிமேட்!

இதையும் படிங்க:221 ஆண்களிடமில்லாதது அந்த நாயிடம் என்ன இருக்கு? - குமுறும் ஆண்கள்

ABOUT THE AUTHOR

...view details