சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
தற்போதைய பாதிப்பு நிலவரம்
இதுவரை எட்டு கோடியே 23 லட்சத்து 94 ஆயிரத்து 821 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 98 ஆயிரத்து 97ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியே 84 லட்சத்து இரண்டாயிரத்து 311ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆறு லட்சத்து 98 ஆயிரத்து 427 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 986 பேர் உயிரிழந்தனர்.
சர்வதேச நாடுகளின் நிலவரம்
உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 99 லட்சத்து 77 ஆயிரத்து 704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 46 ஆயிரத்து 579 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
பாதிப்பு எண்ணிக்கையில் நான்காம் இடத்தில் ரஷ்யா, ஐந்தாம் இடத்தில் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. பிரிட்டனில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்பு தற்போது பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க:பிரிட்டனில் ஒரே நாளில் 50,000க்கும் மேல் கரோனா பாதிப்புகள்