உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. இதுவரை உலகளவில் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரத்து 839 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 77 ஆயிரத்து 594ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 81 லட்சத்து 17 ஆயிரத்து 60ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 64 ஆயிரத்து 852 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 882 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 79 லட்சத்து 45 ஆயிரத்து 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 19 ஆயிரத்து 282 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தீவிரத்தன்மை குறைந்துவரும் நிலையில், ஐரோப்பாவில் பெருந்தொற்றின் இரண்டாம் கட்ட அலை தீவிரமடைந்துவருகிறது.
இதையும் படிங்க:கோவிட்-19 இரண்டாம் அலை: தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்துவரும் ஐரோப்பா