தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா! - உலகளவில் கரோனா பாதிப்பு விவரம்

உலகளவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1,02,973 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,28,393ஆக அதிகரித்துள்ளது.

Global COVID-19 tracker
Global COVID-19 tracker

By

Published : May 16, 2020, 12:46 PM IST

சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. நாளடைவில் சீன அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், மற்ற நாடுகளில் இத்தொற்றின் தாக்கம் வேகமாகப் பரவிவருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்திவரும் இந்த வைரசுக்கு எதிராகத் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் பல நாடுகளும் மும்மரம் காட்டிவருகின்றன.

இந்த நிலையில், உலகளவில் நேற்று ஒரே நாளில் 1,02,973 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,28,393ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இத்தொற்றால் நேற்று 5,273 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,08,645ஆக அதிகரித்துள்ளது.

இது ஒருபக்கம் இருக்க, நேற்று இத்தொற்றால் பாதிக்கப்பட்ட 54,231 பேர் பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணடமைந்தவர்களின் எண்ணிக்கையும் 17,58,039ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் நேற்று புதிதாக 3,970 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,940ஆக அதிகரித்துள்ளது.

இதன்மூலம், கரோனாவால் அதிக பாதிப்புகளான சீனாவை இந்தியா தற்போது முந்தி, உலகளவில் அதிக பாதிப்புகளான நாடுகளின் பட்டியலில் இந்தியா 11ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கரோனா வைரசின் ஆரம்பப் புள்ளியான சீனாவில் இதுவரை 82,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 78,219 பேர் குணமடைந்த நிலையில், 4,633 பேர் உயிரிழந்தனர். இதனால் தற்போது அந்நாட்டில் 89 பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 14,84,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள ஸ்பெயினில் 2,74,367 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் இடத்தில் உள்ள ரஷ்யாவில் நேற்று 10,598 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,62,843ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக ஸ்பெயினில் கரோனா வைரசின் தாக்கம் குறைந்துவரும் இந்தச் சூழலில் ரஷ்யாவில் இதன் தாக்கம் படுபயங்கரமாக உள்ளது. இதனால், அடுத்துவரும் நாள்களில் ரஷ்யா ஸ்பெயினைப் பின்னுக்குத் தள்ளும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க:தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் மக்கள் வாழ்க்கை முறைகளை மாற்றியமைக்க வேண்டியிருக்கும்!

ABOUT THE AUTHOR

...view details