பிரேசில் நாட்டில் வசித்துவந்த 6 மாத கர்ப்பிணி ஜெஸ்ஸிகா கியூடெஸ், தனது காதலனைத் திருமண செய்துகொள்வதற்காக தேவாலயத்திற்கு காரில் சென்றுள்ளார். பாதி வழியில் திடீரென ஜெஸ்ஸிகாவுக்கு பின் கழுத்தில் வலி ஏற்பட்டு, ஒரு பக்க கை கால் செயலிழந்து காரிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனை யாரும் அறியாததால், கார் தேவாலயத்தைச் சென்றடைந்தது. அப்போது கான்கல்வெஸ்-க்கு ஏற்பட்டிருந்த நிலையைக் கண்டு அதிர்ந்த அவரது காதலன் ஃபிலேவியோ, தீயணைப்புத் துறையில் பணியாற்றும் அனுபவத்தால் உடனடியாக முதலுதவி செய்தார்.
இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஜெஸ்ஸிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் ப்ரீகிளாம்சியா என்னும் நோயால் பாதிக்கப்பட்ட ஜெஸ்ஸிகா முளைச் சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை மருத்துவர்கள் போராடிக் காப்பாற்றினர். ஆறு மாதங்களிலேயே குழந்தை எடுக்கப்பட்டதால் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர்.