தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தடுப்பூசி போட்டால் 'பீர்' இலவசம் - அமெரிக்காவில் அசத்தல் அறிவிப்பு!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்பவர்களுக்கு பீர் இலவசம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

'பீர்' இலவசம்
'பீர்' இலவசம்

By

Published : Jun 3, 2021, 2:05 PM IST

உலகளவில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அங்கு கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3.41 கோடியாக உள்ளது. ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா தடுப்பூசி

இந்நிலையில், கரோனா போரில் முக்கிய ஆயுதமான தடுப்பூசியைச் செலுத்தும் பணியில் பைடன் அரசு மும்முரமாகச் செயல்பட்டுவருகிறது. அங்கு மாடர்னா, பைசர்/பையோஎன்டெக், ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டுவருகின்றன.

கரோனா தடுப்பூசிகள் செலுத்துவோருக்குப் பல்வேறு சலுகைகளையும் அறிவித்துவருகிறது. இதுவரை 60 விழுக்காடு மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 4-க்குள் 70% தடுப்பூசி

அமெரிக்காவின் சுதந்திரத் தினமான ஜூலை 4ஆம் தேதிக்குள் 70 விழுக்காடு அமெரிக்க மக்களுக்கு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்த மக்களை ஊக்குவிக்கப் பல கவர்ச்சிகரமான திட்டங்களுடன் அமெரிக்க மதுபான தயாரிப்பு நிறுவனமான அன்ஹீசர்-புஷ்ச் (Anheuser-Busch) களத்தில் இறங்கியுள்ளது.

பீர் இலவசம்

அதன்படி குறிப்பிட்ட நாளுக்குள் தடுப்பூசி இலக்கு அடையப்பட்டால் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பீர் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதேபோல, பல நிறுவனங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள நான்கு முன்னணி குழந்தைகள் பராமரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details