அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பெரும்பாலான இடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, சாலைகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களைச் சந்தித்தனர்.
அமெரிக்க தலைநகரை புரட்டிப்போட்ட கனமழை: வாகன ஓட்டிகள் அவதி! - capital city
வாஷிங்டன்: அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் கனமழை காரணமாக பெரும்பாலான பிரதான சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
வாகன ஓட்டிகள் அவதி
வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கில், பணிக்குச் செல்பவர்கள் பலரும் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்புத்துறையினர் பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதால், வாகனங்களை மக்கள் இயக்க வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, வெள்ளை மாளிகையின் கீழ் தரை தளத்தில் தண்ணீர் புகுந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.