தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சிங்கிள் டோஸில் கரோனாவைத் தடுக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி!

வாஷிங்டன்: ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசி ஒரே டோஸிலேயே 66 விழுக்காடு செயல்திறன் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

single-dose shot
கரோனா தடுப்பூசி

By

Published : Feb 26, 2021, 1:32 PM IST

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு குறைந்தபாடில்லை. தீநுண்மி பரவலைத் தடுத்திட, தடுப்பூசி விநியோகம் மின்னல் வேகத்தில் நடைபெற்றுவருகிறது. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.

தற்போது அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், ஃபைசர் நிறுவனம், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, இந்தியாவின் கோவாக்சின் உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டிலிருந்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி டோஸ் 66 விழுக்காடு பயனுள்ளதாக இருக்கும் எனவும் மற்ற தடுப்பூசிகளைப் போல் அல்லாமல் ஒரே டோஸ் போதுமானது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தடுப்பூசியால் எவ்விதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. மற்ற கரோனா தடுப்பூசிகளுக்கு இரு டோஸ்கள் தேவைப்படும்போது இந்த மருந்து ஒரே டோஸில் 66 விழுக்காடு நோய்த்தடுப்புத் திறனை அளிக்கிறது.

இந்தத் தடுப்பூசி குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "மிதமான கோவிட் 19 பாதிப்புக்கு எதிராக 66 விழுக்காடு பாதுகாப்பாக இருக்கும். அதேபோல், கடுமையான கரோனா பாதிப்புக்கு எதிராக 85 விழுக்காடு பயனுள்ளதாக இருக்கும்" எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்து விரைவில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அனுமதியுடன் அவசரகால பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 44 நபர்களிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதில், சாதகமான முடிவுகள்தான் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியானது, முன்களப்பணியாளர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:கரோனாவால் உயிரிழந்த 5 அமெரிக்கர்கள் - அஞ்சலி செலுத்திய பைடன்!

ABOUT THE AUTHOR

...view details