அமெரிக்காவில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஃபைஸர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் கரோனா தடுப்பு மருந்திற்கு இன்னும் சில நாள்களில் ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பு மருந்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்கப்பட்டாலும்கூட, அதை முறையாக விநியோகிப்பதில் பெரும் சவால் உள்ளது. தடுப்பு மருந்தை சரியான முறையில் விநியோகித்தால் மட்டுமே லட்சக்கணக்கானோரின் உயிரை காப்பாற்ற முடியும்.
இந்நிலையில் இது குறித்து அமெரிக்காவின் தொற்றுநோய் வல்லுநர் அந்தோணி ஃபவுசி கூறுகையில், "அதிபராக ஜோ பைடன் பதவியேற்றவுடன், முடிந்தவரை அனைவருக்கும் விரைவாக தடுப்பு மருந்தை அளிக்கும் விநியோக முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அமெரிக்காவில் 75 முதல் 85 விழுக்காடு மக்களுக்கு விரைவில் தடுப்பு மருந்தை அளிக்க முடிந்தாலே கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். அதை செய்வதற்கு தேவையான திறன் நம்மிடம் உள்ளது.