அமெரிக்காவின் டெக் துறையில் வெகு சில நிறுவனங்கள் மட்டுமே பெரும் ஆதிக்கத்தை செலுத்துவதாகவும், பிற நிறுவனங்களின் வளர்ச்சியை இந்நிறுவனங்கள் தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக அமெரிக்காவில் டெக் துறையில் மிகப் பெரிய நான்கு நிறுவனங்களான கூகுள், ஆப்பிள், ஃபேஸ்புக், அமேசான் ஆகிய நிறுவனங்களிடம் அந்நாட்டின் நாடாளுமன்ற விசாரணைக் குழு கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் விசாரணை நடத்திவருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணைக்கு இந்நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்கள் தங்கள் வாக்குமூலத்தை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றம் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது.
அதன்படி, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் டிம் கூம் குக் எழுத்து மூலம் சமர்பித்த தனது வாக்குமூலத்தில், "சாம்சங், எல்ஜி, ஹவாய், கூகுள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் ஸ்மார்ட்போன் உற்பத்தி சந்தையில் நாங்கள் போட்டியிடுகிறோம்.