தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மருத்துவர்களுக்கு கரோனா பரவலைத் தடுக்கும் கண்ணாடிப் பெட்டி! - மருத்துவர்களுக்கு கரோனா பரவாலை தடுக்கும் கண்ணாடிப் பெட்டி!

வாஷிங்டன்: மருத்துவர்களுக்கு கரோனா தொற்று பரவாமல் தடுக்க, அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகம் பாதுகாப்பான கண்ணாடிப் பெட்டி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.

கரோனாத் தொற்று
கரோனாத் தொற்று

By

Published : May 24, 2020, 7:24 PM IST

உலகளவில் கரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அந்நோயால் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

சிகிச்சையின்போது நோயாளிகளிடம் இருந்து இருமல், தும்மல் துளிகள் மருத்துவர்கள் மீது எளிதில் படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால்தான், மருத்துவர்கள் பெருமளவில் கரோனா பிடியில் சிக்கிக்கொள்கிறார்கள்.

அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்காவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் விதமாக, கரோனா நோயாளிகளின் தலையின் மேல் வைக்கக்கூடிய கண்ணாடிப் பெட்டி(glass box) ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த கண்ணாடிப் பெட்டிகள் இருவகைப்படும். ஒன்று நம் பயன்பாட்டிற்கேற்ப மடக்கக்கூடியவை; மற்றொன்று சி (C) வடிவில் ஆனது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கரோனா

மருத்துவனையில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் தலை முழுமையாகக் கவரும் வகையில், இந்த கண்ணாடிப் பெட்டியை வைத்துவிட்டு, அதனினுள் சுவாசக்குழாயை செலுத்திவிட்டால், கரோனா நோயாளிகளிடம் இருந்து வரும் இருமல் போன்ற துளிகள், மருத்துவர்கள் மீது ஒட்டும் அபாயம் இருக்காது.

மேலும் அதில் மிகச்சிறிய உயிரணு செல் கூட, கண்ணாடிப் பெட்டியைவிட்டு வெளியேறச் செய்யாது. அதனால் நோயும் பரவ வாய்ப்பில்லை.

மருத்துவர்கள் தங்கள் கைகளில், கை உறையை அணிந்துகொண்டு, அந்தக் கண்ணாடி பெட்டினுள் சுவாசக்குழாயை நோயாளிகளுக்கு பொருத்திவிட்டு, எந்த கவலையும் இன்றி சிகிச்சையளிக்கலாம். இது அவர்களுக்கு ஒரு கவசமாக செயல்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாகிஸ்தானுக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்!

ABOUT THE AUTHOR

...view details