அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 3ஆம் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மூன்று நாளாக தொடர்ந்து நடைபெற்றுவந்தது. இந்நிலையில், பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை என்ற நிலையில், பைடன் 284 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
"நம்ம செய்து காட்டிட்டோம்" - மகிழ்ச்சி பொங்கும் கமலா ஹாரிஸ் - soul of America
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கு அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்கவுள்ள கமலா ஹாரிஸ் மகிழ்ச்சி பொங்க வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கு அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்கவுள்ள கமலா ஹாரிஸ் மகிழ்ச்சி பொங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ பதிவில், "நம்ம செய்து காட்டிட்டோம். நீங்கள்தான் அமெரிக்காவின் அடுத்த அதிபர்" என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இத்தேர்தலானது ஜோ பைடனோ அல்லது என்னை பற்றியுமானது மட்டும் அல்ல. அதையும் தாண்டியது. அமெரிக்காவின் கருத்தாக்கம் மற்றும் தொடர்ந்து போரிட வேண்டும் என்ற எண்ணத்திற்கானது. நிறைய பணிகள் காத்துக்கொண்டிருக்கின்றன. அதனை தொடங்குவோம்" என பதிவிட்டுள்ளார்.