வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி கடந்த 8ஆம் தேதி தொடங்கியது.
நீண்ட இழுப்பறிக்கு பின் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 306 இடங்களில் வெற்றிப்பெற்று, அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 217 இடங்களை கைப்பற்றினார்.
ஆட்சி அமைக்க 270 இடங்கள் தேவையென்ற நிலையில், பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய ஜோ பைடனுக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து கூறினர்.
ஆனால் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுத்தார்.
இந்நிலையில், நேற்று ட்விட்டரில் பதிவிட்ட டொனால்ட் ட்ரம்ப், தேர்தலில் மோசடி செய்தே ஜோ பைடன் வெற்றிப் பெற்றார் என கூறியிருந்தார். இதனால் ஜோ பைடனின் வெற்றியை அவர் ஒப்புக்கொண்டார் என பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், மீண்டும் தான் தான் தேர்தலில் வெற்றிப்பெற்றேன் என டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அழுகுனி ஆட்டம் ஆடும் ட்ரம்ப்!