சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடிய குர்து இன மக்கள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. தனி நாடு கேட்கும் குர்து இன மக்கள் தங்கள் நாட்டிலும், எல்லையிலும் இருப்பதை துருக்கி அதிபர் டயீப் எர்டோகன் ஆபத்தாக கருதுவதே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், குர்து இன மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்கும் நோக்கில் அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், குர்துக்கள் மீதான ராணுவத் தாக்குதலால், குடிமக்களின் உயிர்களுக்கும், அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் நிலவிவருகிறது. இதனால் துருக்கி மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.