தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனாவால் மீண்டும் தள்ளிப்போகும் கலிபோர்னியா டிஸ்னி அட்வென்ச்சர் பார்க் திறப்பு! - கலிபோர்னியாவின் அனாஹெய்மில் உள்ள டிஸ்னி தீம் பூங்காக்கள்

லாஸ் ஏஞ்சல்ஸ் : கலிபோர்னியா டிஸ்னி அட்வென்ச்சர் பூங்கா ஜூலை மாதம் திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் காலவரையின்றி பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

disney
disney

By

Published : Jun 26, 2020, 5:11 PM IST

கலிபோர்னியாவின் அனாஹெய்மில் உள்ள டிஸ்னி தீம் பூங்காக்கள் கோவிட் -19 தொற்று நோய் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளன.

ஆனால் படிப்படியாக கரோனா தொற்றின் தாக்கம் குறைந்ததைத் தொடர்ந்து, வருகிற ஜூலை மாதம் கலிபோர்னியா அட்வென்ச்சர் பூங்கா திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ள நிலையில் பூங்கா திறப்பை மீண்டும் ஒத்தி வைப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து டிஸ்னி தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆயிரக்கணக்கான கலைஞர்களை மீண்டும் அழைத்து வந்து பணியை தொடங்குவதற்கு சில நாள்கள் ஆகும். அரசு அலுவலர்களின் அறிவுரைகளை ஏற்று பூங்கா திறப்பையும், உணவகத் திறப்பையும் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம். ஆனால், திட்டமிட்டபடியே டவுன்டவுன் டிஸ்னி ஷாப்பிங், டைனிங் மாவட்டம் ஜூலை ஒன்பதாம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :வருகிறது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!

ABOUT THE AUTHOR

...view details