தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 18, 2020, 11:29 AM IST

ETV Bharat / international

உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்த மோடி!

டெல்லி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பு நாடாக, உலக நாடுகள் அளித்த ஆதரவிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

deeply-grateful-for-support-shown-by-global-community-to-indias-membership-of-unsc-pm
deeply-grateful-for-support-shown-by-global-community-to-indias-membership-of-unsc-pm

ஐநா சபையின் சக்திவாய்ந்த அமைப்பாகக் கருதப்படும் பாதுகாப்பு கவுன்சில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய ஐந்து நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாகவும், 10 நாடுகளை தற்காலிக உறுப்பினர்களாகவும் கொண்டு செயல்பட்டுவருகிறது.

இந்தத் தற்காலிக உறுப்பினர் நாடுகளுக்காக ஆண்டுதோறும் சுழற்சி முறையில் தேர்தல் நடைபெறும். அந்த வகையில், 2021ஆம் ஆண்டிற்கான தற்காலிக உறுப்பு நாடுகளுக்கான தேர்தல் நேற்று ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது.

இதில் உறுப்பு நாடுகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் நாடுகள் மூன்றில் இரண்டு விழுக்காடு வாக்குகளைப் பெறவேண்டும். அதாவது, 193 நாடுகளில், 128 நாடுகளின் வாக்குகளைப் பெறவேண்டும்.

இந்நிலையில், ஆசிய பசுபிக் பிராந்திய நாடான இந்தியா தற்காலிக உறுப்பு நாடாக போட்டியிட்டது. இதில், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 55 நாடுகள் உள்பட 184 நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக வாக்களித்ததால், இந்தத் தேர்தலில் இந்தியா ஏகமனதாக வெற்றிபெற்றது. இது பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பு நாடாக இந்தியா தேர்வாகும் எட்டாவது முறையாகும்.

இதையடுத்து, இந்தியா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக வரும் ஜனவரி ஒன்றாம் தேதிமுதல் செயல்படும்.

இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, “ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பு நாடாக ஆதரவு வழங்கிய உலக நாடுகளுக்கு நன்றி.

உலகளாவிய அமைதி, பாதுகாப்பு, சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணிபுரியும்” எனத் தெரிவித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details