கரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளை ஒட்டுமொத்தமாக பாதித்துள்ள நிலையில், தற்போது உலகின் இரு பெரு வல்லாதிக்க சக்திகள் இந்நோய் பாதிப்பு குறித்து மோதத் தொடங்கியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த வைரஸை சைனீஸ் வைரஸ் என்று சீனாவை சீண்டும் விதமாகக் குறிப்பிட்டுவருகிறார்.
இதற்கிடையே அமெரிக்க ராணுவம்தான் சீனாவுக்கு இந்த வைரஸை ஏவிவிட்டது என சீன தரப்பு கூறிவருகிறது.
இதற்கு பதிலடி தரும் விதமாகவே ட்ரம்ப் இவ்வாறு சைனிஸ் வைரஸ் எனக் குறிப்பிட்டுவருகிறார். மேலும், இந்நோய் பாதிப்பு குறித்து உண்மை நிலவரத்தை கண்டறிய தங்கள் நாட்டு செய்தியாளர்களை சீனா சரியாக அனுமதிக்கவில்லை, இதுவே நோயின் உண்மைத்தன்மை வெளிப்படாததற்கு காரணம் என அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள சீனா, அமெரிக்கா இதுபோன்ற அவதூறுகளை சீனா மீது வீசக்கூடாது எனவும், தான் செய்த தவறை அமெரிக்கா உடனடியாக திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
வைரஸ் காரணமாக இரு நாடுகளும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், இரு நாட்டு தலைமையும் தற்போது மோதிக்கொள்வது உலக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:கரோனாவிற்கு மருந்து: விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார் விஜய பாஸ்கர்!