கோவிட்-19 தொற்று தற்போது 190-க்கும் மேற்பட்ட நாடுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தத் தொற்றுக்கு எதிராகத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முயன்றுவருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தக் கரோனா தொற்று என்பது அழிக்கவே முடியாத தொற்றாக மாறும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களுக்குச் சாதாரண சளியை ஏற்படுத்தும் நான்கு கரோனா வைரஸ்கள் (தீநுண்மி) தற்போது சமூகத்தில் உள்ளதாகவும் இந்தக் கரோனா தீநுண்மி அவ்வாறு அழிக்க முடியாத ஐந்தாவது தொற்றாக மாறும் இடர் உள்ளதாகவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிகாகோ பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் வல்லுநர் சாரா கோபி கூறுகையில், "இந்தத் தீநுண்மி இங்கேயே இருந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். இந்தத் தீநுண்மி தொற்றுடன் நாம் எப்படிப் பாதுகாப்பாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதே கேள்வி" என்றார்.
கோவிட்-19 தொற்று தற்போது ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இந்தத் தீநுண்மி குறித்த நமக்கு அதிக விஷயங்கள் தெரியாது, எனவே உடனடியாக இந்த ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அமெரிக்காவின் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் முன்னாள் இயக்குநர் டாம் ஃப்ரீடென், "என்னிடம் பலரும் இந்தக் கரோனா காலத்தில் செய்ய வேண்டிய ஒரே விஷயம் என்ன என்று கேட்கிறார்கள்.