தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா தடுப்பு மருந்து ஆய்வு: கூடுதலாக நிதியளித்த பில் கேட்ஸ் - கரோனா தடுப்பு மருந்து ஆய்வுக்கு நிதியளித்த பில் கேட்ஸ்

நியூயார்க்: கரோனா பெருந்தொற்று தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள பில் கேட்ஸ் அறக்கட்டளை தற்போது கூடுதலாக 250 மில்லியன் டாலரை(1.8 ஆயிரம் கோடி ரூபாய்) வழங்கியுள்ளது.

Gates Foundatio
Gates Foundatio

By

Published : Dec 10, 2020, 5:44 PM IST

கரோனா தொற்று உலகையே முழுமையாக புரட்டிப் போட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவும் அதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கவும் ஆய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், பில் & மெலினா கேட்ஸ் அறக்கட்டளை சார்பாக கரோனா தொற்று தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள கூடுதலாக தற்போது 250 மில்லியன் டாலர் (1.8 ஆயிரம் கோடி ரூபாய்) வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள பில் கேட்ஸ் அறிக்கட்டளை மொத்தம் 1.7 பில்லியன் டாலரை (12.89 ஆயிரம் கோடி ரூபாய்) நன்கொடையாக அளித்துள்ளது.

இது குறித்து பில் & மெலினா கேட்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021 ஆம் ஆண்டு உலகம் சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் அனைவருக்கும் இது சிறப்பானதாக இருக்குமா என்பதை உலகத் தலைவர்களின் நடவடிக்கைகளும் முடிவுகளுமே தீரமானிக்கும்.

ஒருவர் எங்கு வாழ்ந்தாலும் அவர்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும், தேவையான அனைருக்கும் மருத்துவ சோதனைகள், சிகிச்சைகள், தடுப்பு மருந்துகள் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சோதனைகள், சிகிச்சைகள், தடுப்பு மருந்தை எளிதில் உருவாக்கவும் விநியோகிக்கவும் தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள, குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு, இந்த நிதி உதவியாக இருக்கும். மேலும், தடுப்பு மருந்தை அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் எளிதாகவும் வேகமாக விநியோகிக்க தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள இந்த நிதி உதவும்." என்று தெரிவிக்கப்படுள்ளது.

இது குறித்து பில் கேட்ஸ் கூறுகையில், "இந்த ஆண்டு தொடக்கத்தில் நாம் எதிர்பார்த்தைவிட, இப்போது நம்மிடம் அதிக திறன்கொண்ட தடுப்பு மருந்துகள் உள்ளன. இருப்பினும், இது உலகதிற்கு வந்தால் மட்டுமே நம்மால் மக்களை காக்க முடியும்" என்றார்.

இதையும் படிங்க: இன்னும் சில வாரங்களில் தடுப்பு மருந்து வழங்கும் பணியை தொடங்கும் இஸ்ரேல்!

ABOUT THE AUTHOR

...view details