அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஹார்லி மோர்கன்(19). இவரது தோழி பவுட்ரியாகஸ்(20). இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமான சில நிமிடங்களில் புதுமண தம்பதி மரணம்! - Couple dies after wedding
நியூயார்க்: திருமணம் முடிந்த சில நிமிடங்களில் புதுமண தம்பதி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் புதுமண தம்பதி இருவரும் நீதிமன்றத்தின் வெளியே நின்ற காரில் ஏறி புறப்பட தயாரான போது, எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. இதில் கார் பலமுறை உருண்டு விபத்துக்குள்ளானதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து மோர்கனின் தாயார் லஷ்வானா கூறுகையில், எனது பிள்ளைகளை வாழ்த்த வந்தேன். ஆனால் அவரது இறுதி சடங்கை பார்ப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இருவர் குறித்தும் நிறைய கனவுகள் கண்டு வைத்திருந்தேன் என்றார். புதுமண தம்பதிகள் திருமணமான சில நிமிடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.