ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்காவில் 247 உயிர்களை எடுத்த கரோனா - International news in tamil

வாஷிங்டன்: கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் 247 பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர்.

Coronavirus cases in US
Coronavirus cases in US
author img

By

Published : Mar 26, 2020, 12:46 PM IST

உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவை ஆட்டி படைக்கத் தொடங்கியுள்ளது. அந்த நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65,000க்கும் மேல் அதிகரித்துள்ளது. இதில் 10,000க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

அதிகளவு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனா, இத்தாலிக்கு பிறகு மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசுகையில், அமெரிக்காவை அச்சுறுத்தும் இந்த கொடிய நோய், நியூயார்க் நகரை கடுமையாக தாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனால் 1,027 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் நேற்று மட்டும் ஒரே நாளில் 247 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: லாக் டவுன் மட்டும் போதாது; பரிசோதனை முக்கியம் - உலக சுகாதார அமைப்பு

ABOUT THE AUTHOR

author-img

...view details