அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பாளர்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றனர். இந்நிலையில் நாளொன்று 40 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அதிகரிப்பு பெரிதும் விரிவாக்கப்பட்ட சோதனையை பிரதிபலிக்கும் என்று நம்பப்பட்டாலும், நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்துவருகிறது.
இதற்கிடையில் கரோனா வைரஸ் மீண்டு(ம்) வருவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், அரிசோனா, டெக்சாஸ் மற்றும் புளோரிடா உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.