வாஷிங்டன்:அமெரிக்காவில் விசா மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய சீன விஞ்ஞானிக்கு, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சீன தூதரகம் அடைக்கலம் கொடுத்திருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ தெரிவித்திருந்த நிலையில், அவர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
உயிரியல் ஆராய்ச்சியாளரான டாங் ஜுவான், அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக சீன ராணுவத்துடன் தனக்குள்ள தொடர்பு குறித்து பொய் கூறியிருப்பதும், பின்னர் கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக, சீன தூதரகத்தில் தஞ்சமடைந்திருப்பதாகவும் வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
ஜூன் 26ஆம் தேதி விசா மோசடி தொடர்பாக நீதிமன்றத்தில் டாங் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவரது விசா விண்ணப்பத்தில் சீன ராணுவத்துடனான தனது தொடர்பை அவர் மறைத்து வைத்திருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆனால் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. அலுவலர்கள், சீன ராணுவ சீருடையுடன் இருக்கும் புகைப்படங்கள், போர் ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக டாங் பணியாற்றி இருப்பதையும் விசாரணையில் கண்டறிந்தனர்.
ஜூன் 20 அன்று எஃப்.பி.ஐ விசாரணையின்போது, 'சீன ராணுவத்தில் பணியாற்றுவதை மறுத்த டாங், தனது சீருடையில் உள்ள சின்னத்தின் அர்த்தம் தனக்கு தெரியாது என்றும், ராணுவ மருத்துவ பல்கலையில் கலந்துகொள்ள ராணுவ சீருடை அணிவது அவசியம் என்றும் டாங் கூறியதாக ஜூலை 20ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கலான விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.