தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்; கைகோர்த்த அமெரிக்க நிறுவனங்கள்!

இந்தியாவில் கரோனா தொற்று காரணமாக பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, பல ஆயிரம் பேர் தினமும் உயிரிழந்து வருகின்றனர். இச்சூழலில் இந்தியாவிற்கு உதவ வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் டாப் 40 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அலுவலர்கள் ஒன்று சேர்ந்து குழு அமைத்துள்ளனர்.

40 அமெரிக்க நிறுவனங்கள்
40 அமெரிக்க நிறுவனங்கள்

By

Published : Apr 27, 2021, 7:00 PM IST

இந்தியாவில் பிராண வாயு குறைபாடு, தடுப்பூசி பற்றாக்குறை, போதுமான தடுப்பூசி தயாரிப்பதற்கான மூலப்பொருள் பற்றாக்குறை எனப் பல பிரச்னைகள் இருக்கும் நிலையில், அமெரிக்காவின் சேம்பர் ஆப் காமர்ஸ்-ன் அமெரிக்கா - இந்தியா பிஸ்னஸ் கவுன்சில் பரிவு தலைமையில், 40 நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் அடங்கிய குழு இந்தியாவிற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

20,000 பிராணவாயுசெறிவூட்டிகள்

இக்குழுவானது முதற்கட்டமாக 20,000 பிராண வாயு செறிவூட்டிகளை அடுத்த சில வாரத்தில் இந்தியாவிற்குக் கொண்டு சேர்க்கும் பணிகளைச் செய்ய முடிவு செய்துள்ளதாக, டெலோட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் புனித் ரென்ஜன் தெரிவித்துள்ளார்.

இதற்கு அடுத்த படியாக 10 லிட்டர், 45 லிட்டர் அளவுகள் கொண்ட பிராணவாயு உருளைகளை இந்தியாவிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பிசியான நேரத்தில் மக்கள் நாயகனாக வலம்வரும் ஆஸி வீரர்!

40 நிறுவன தலைமைகள் அடங்கிய இக்குழுவில் மருந்து நிறுவனங்கள் மட்டுமல்லாமல் ரீடைல், ஈ-காமர்ஸ், தகவல் தொழில்நுட்பம் என பல பெரிய உற்பத்தி நிறுவனங்களும் அடங்கியுள்ளது.

அமெரிக்காஉடனானபேச்சுவார்த்தை

மேலும், அமெரிக்க - இந்திய அரசுகள் மத்தியிலான பேச்சுவார்த்தையும் நன்மையாக முடிந்துள்ள நிலையில், பல தேவைகளை இந்தியாவிற்கு எங்களால் அளிக்க முடியும் என இக்குழு தெரிவித்துள்ளது.

கரோனா மோசமான பாதித்துள்ள இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அமைக்கப்பட்ட இக்குழு ‘குளோபல் டாஸ்க் ஃபோர்ஸ் ஆன் பேண்டமிக் ரெஸ்பான்ஸ்: மொபிலைஸிங் ஃபார் இந்தியா’ (Global Task Force on Pandemic Response: Mobilizing for India) எனப் பெயரிட்டுள்ளது.

முதல் முறையாக ஒரு தனி நாட்டிற்கு உதவும் வகையில் ஒரு குளோபல் டாஸ்க் போர்ஸ் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு உள்ளது என, அமெரிக்கா மாநிலச் செயலாளர் டோனி பிளின்கென் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details