கலிபோர்னியா : அமெரிக்காவில் பண மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று கருவூலத்துக்கு சென்று கொண்டிருந்தது.
அந்த வாகனம் வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் உள்ள இரு மாகாணங்களை கடக்கும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சரக்கு வாகனத்தில் இருந்த மூட்டையில் இருந்து பணங்கள் சிதறி சாலையில் விழுந்தன.
சிறிது நேரத்தில் அந்தச் சாலைப் பகுதியில் பண மழை பொழிய ஆரம்பித்தது. காற்றில் 1 டாலர் முதல் 20 டாலர் வரையிலான பணங்கள் பறந்து வந்தன. இதைப் பார்த்த அப்பகுதிவாசிகள் மழைக் காலத்தில் ஈசலை பிடிப்பது போல் போட்டிப் போட்டுக்கொண்டு பணத்தை அள்ளிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (நவ.19) அதிகாலை நடந்துள்ளது. பணம் மூட்டையிலிருந்து காற்றில் பறந்து செல்வது முதலில் சரக்கு வாகன ஓட்டிக்கு தெரியவில்லை.