தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 23, 2020, 3:06 PM IST

ETV Bharat / international

இரண்டு வாரங்களாக கரோனாவுடன் போராடிவரும் பிரேசில் அதிபர்

பிரேசிலியா: ஜூலை 7ஆம் தேதி அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் தொற்றிலிருந்து மீளாமல் தவித்துவருகிறார்.

Brazil
Brazil

உலக நாடுகளை உலுக்கிவரும் கரோனா பாதிப்பு அந்நாட்டின் தலைவர்களையும் விட்டுவைக்கவில்லை. சர்வதேச அளவில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

அந்நாட்டில் இதுவரை 22 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், சுமார் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பைக் கையாண்ட விதம் குறித்து அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது கடும் விமர்சனம் எழுந்துவந்த நிலையில், அவரே கடந்த 7ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டார்.

வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில் அவருக்கு மூன்றாவது முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு தொடர்ந்து கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

அதேவேளை அவர் உடல்நிலை மோசமாக ஒன்றும் இல்லை எனவும், அவருக்கு பக்கபலமாக மருத்துவக் குழு செயல்பட்டுவருவதாகவும் அதிபரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:73 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானில் சீக்கியர்களுக்கு வழங்கப்பட்ட உரிமை!

ABOUT THE AUTHOR

...view details