தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிரேசில் பத்திரிகையாளர் மாரடைப்பால் காலமானார்!

சாவ் பாலோ: பிரேசில் பத்திரிகையாளர் ரபேல் யென்செல் மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் பத்திரிகையாளர் மாரடைப்பால் காலமானார்

By

Published : Mar 27, 2019, 11:04 AM IST

ரபேல் யென்செல், பிரேசிலில் வானொலி ஒன்றின் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். 2016ஆம் ஆண்டு கால்பந்து அணியுடன் ரபேல் யென்செல் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 71 பேர் பலியான நிலையில், யென்செல் உள்ளிட்ட ஒன்பது பேர் உயிர் பிழைத்தனர்.

இந்நிலையில்,தனது நண்பர்களுடன் வழக்கம் போல் கால்பந்து விளையாடி கொண்டிருந்த யென்செல்நிலை தடுமாறு மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவசரமாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத்தெரிவித்தனர்.

பிரேசில் பத்திரிகையாளர் மாரடைப்பால் காலமானார்

இது தொடர்பாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள அவர் சார்ந்த கிளப், "தனது வாழ்நாள் முழுவதும் பல அற்புதமான செயல்களை செய்தவர். இந்த கிளப்பின் மறுக்கட்டமைப்புக்கு அவர் ஆற்றிய பங்கு எப்போதும் நினைவில் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details