தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிரேசிலுக்கு செல்லும் பிரிட்டன் கரோனா தடுப்பு மருந்து

பிரேசிலியா: ஆகஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியளர்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தின் 15 லட்சம் டோஸ்கள் பிரேசில் நாட்டிற்கு அனுப்பப்படுகிறது.

Oxford University Corona vaccine
Oxford University Corona vaccine

By

Published : Dec 3, 2020, 4:57 PM IST

கரோனா தடுப்பு மருந்தின் மருத்துவ சோதனை தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவத்தின் கரோனா தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு பிரிட்டன் நேற்று(நவ.2) அனுமதியளித்திருந்தது.

இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியளர்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தின் 15 லட்சம் டோஸ்கள் பிரேசில் நாட்டிற்கு அனுப்பப்படுவதாக அந்நாட்டின் சுகாதார துறை அமைச்சர் எட்வர்டோ பசுவெல்லோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்பு மருந்தின் 15 லட்சம் டோஸ்கள் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் பிரேசில் வந்தடையும். அடுத்தாண்டு ஜூலை மாததத்திற்குள் 10 கோடி டோஸ்கள் எங்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பாக்கிறோம்.

மேலும், தடுப்பு மருந்தை தயாரிக்க தேவையான தொழில்நுட்பத்தையும் எங்களுடன் பகர்ந்துகொள்வாரங்கள். இதன் மூலம் கூடுதலாக 1.6 கோடி டோஸ்கள் அடுத்தாண்டு பிற்பாதியில் எங்களால் உருவாக்க முடியும். இந்த இரண்டையும் சேர்த்தால் மொத்தம் 2.6 கோடி டோஸ்கள் எங்களுக்கு அடுத்தாண்டு கிடைக்கும். இது எங்கள் நாட்டிலுள்ள மொத்த குடிமகன்களுக்கும் இரண்டு முறை தடுப்பு மருந்து வழங்க போதுமானதாகும்" என்றார்.

ஃபைஸர், மாடர்னா நிறுவனங்களின் கரோனா தடுப்பு மருந்துகளைவிட ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் கரோனா தடுப்பு மருந்தின் தடுப்பாற்றல் குறைவுதான். இருப்பினும் இந்த இரண்டு தடுப்பு மருந்துகளைவிட ஆக்ஸ்போர்ட்டின் கரோனா தடுப்பு மருந்தின் விலை குறைவு என்பதால் வளரும் நாடுகள் பெரும்பாலும் ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்திற்கே முன்னுரிமை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: யாருக்கு? எப்போது? எப்படி? - ஃபைஸரின் கரோனா தடுப்பு மருந்து விநியோகம் குறித்து தகவல்கள்

ABOUT THE AUTHOR

...view details