பிரேசில் பிரதமர் ஜெயிர் போல்சனரோ தனக்குச் சாதகமான ஒரு நபரை மத்திய காவல்துறைத் தலைவராக நியமிக்கத் திட்டமிட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டி அந்நாட்டு நீதித் துறை அமைச்சர் சர்ஜி மோரோ கடந்த வெள்ளிக்கிழமை பதவி விலகினார்.
சர்ஜி மோராவின் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ஜெயிர் போல்சனரோ, அரசியல் ஆதாயம் தேடவே சர்ஜி தன் மீது குற்றஞ்சாட்டியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு பிரேசில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், அதிபர் போல்சனரோ மீதான ஊழல் புகாரை விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என அந்நாட்டின் தலைமை வழக்குரைஞர் அகஸ்தோ அராஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, பிரேசிலின் மத்திய காவல் துறைத் தலைவராக இருந்த மௌரிசியோ வலெக்ஸோவை அதிபர் போல்சனரோ பதவி நீக்கம்செய்தார். ஆனால் இதனை ஏன் செய்தார் என அவர் விளக்கமளிக்கவில்லை.