தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 2, 2021, 3:05 PM IST

ETV Bharat / international

பிரேசிலில் மீண்டும் தலைதூக்கும் கரோனா; திரும்புமா ஊரடங்கு!

பிரேசில் நாட்டில் மீண்டும் கரோனா பாதிப்பு தலைதூக்கி வருவதால் அங்கு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என அந்நாட்டு சுகாதாரத் துறை நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

Brazil
பிரேசில்

பிரேசில் நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் மிக மோசமான உயிரிழப்பை பிரேசில் கண்டது. ஒருவாரத்தில் மட்டும் அந்நாட்டைச் சேர்ந்த 8,244 பேர் உயிரிழந்தனர்.

அங்கு தடுப்பூசி நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட போதிலும் இதுவரை 4 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்துவருவதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள் நிரம்பிவழிகின்றன.

நோயைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. குறைந்தபட்சம் இரவு 8 மணிமுதல் அதிகாலை 6 மணிவரை ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் இதுவரை ஒரு கோடியே ஐந்து லட்சத்து 89 ஆயிரத்து 698 பேர் கரோனா பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். பெருந்தொற்று காரணமாக இரண்டு லட்சத்து 55 ஆயிரத்து 836 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:இந்தியா வரவேண்டிய இண்டிகோ பாகிஸ்தானில் தரையிறங்கியது ஏன்?

ABOUT THE AUTHOR

...view details