அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்பும் அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் களமிறங்குகின்றனர். இதற்கிடையே, சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பில், ட்ரம்ப்புக்கு எதிரான பிடனின் முன்னிலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் தேர்தலுக்கு 12 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், இருவருக்குமான வித்தியாசம் நான்கு விழுக்காடாக குறைந்துள்ளது. பிடனுக்கு ஆதரவாக 46 விழுக்காடு வாக்குகளும் ட்ரம்ப்க்கு ஆதரவாக 42 விழுக்காடு வாக்குகளும் பதிவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று விழுக்காட்டினர் வேறு ஒருவருக்கு வாக்களிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள மூன்று விழுக்காட்டினர் வாக்களிக்கப்போவதில்லை எனக் கூறியுள்ளனர்.