வாஷிங்டன்:அமெரிக்காவில் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைத் தாண்டியுள்ள சூழலில், அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் இன்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தவுள்ளார்.
கரோனா பெருந்தொற்று பாதிப்பினால் அமெரிக்காவின் முதல் இறப்பு உறுதிப்படுத்தப்பட்டு இன்றுடன் (பிப்ரவரி 22) ஓராண்டாகிறது.