தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பதவியேற்ற முதல் நாளில் 17 கையெழுத்து; ஜோ பைடன் ஆட்டம் ஆரம்பம்! - அதிபர் ஜோ பைடன் 17 உத்தரவுகள்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற முதல் நாளிலேயே 17 உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

Biden
ஜோ பைடன்

By

Published : Jan 21, 2021, 1:10 PM IST

அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் நேற்று(ஜன.20) பதவியேற்றுக்கொண்டார். ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே 17 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்து துரிதமாக பணிகளைத் தொடங்கியுள்ளார் பைடன்.

முக்கியமாக, இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வரக்கூடாது என 2017ஆம் ஆண்டில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த தடையை பைடன் நீக்கியுள்ளார். அத்துடன் உலக சுகாதார அமைப்புடன் அமெரிக்கா இணைந்து செயல்படாது என அறிவித்திருந்த நிலையில் அமைப்புடன் உறவை மீண்டும் புதுப்பித்துள்ளார் பைடன்.

அண்டை நாடான மெக்சிகோ எல்லையில் ட்ரம்ப் அரசு மேற்கொண்டு வந்த சுவர் கட்டுமானத்தையும் நிறுத்திவைக்க பைடன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வெள்ளை மாளிகையில் இந்தியர்களின் ஆதிக்கம்!

ABOUT THE AUTHOR

...view details