ஆப்கானிஸ்தானிலிருந்து படை விலகல் நடவடிக்கையைஅமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.
20 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக தங்கள் நாட்டைச் சேர்ந்த அனைத்து படை வீரர்களையும் அமெரிக்கா திரும்ப அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நடவடிக்கை காரணமாக ஆப்கானிஸ்தானில் மீண்டும் உள்நாட்டுப் போர் தலைதூக்கியுள்ளது. தலிபான் அமைப்பினர் ஆப்கான் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி பல்வேறு மாகாணங்களையும் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றனர்.
இதையடுத்து அமெரிக்காவின் படை விலகல் முடிவுக்கு பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இதற்கு அதிபர் ஜோ பைடன் பதிலளித்துள்ளார்.