அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டின் ராணுவ அகடாமியில் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளார். முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது பதவிக் காலத்தின் இறுதி நாள்களில் ராணுவ அகாடமிக்கு அவசர அவசரமாக 18 அலுவலர்களை நியமித்தார்.
இந்த நியமனம் செல்லாது எனக் கூறி 18 பேரையும் நீக்கும் உத்தரவை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். இதை வெள்ளை மாளிகையின் உள்விவகாரங்களுக்கான இயக்குனர் கேதி ரசல் அறிவித்துள்ளார்.
அண்மையில், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா படை விலகல் நடவடிக்கையை மேற்கொண்டது. 20 ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவசர அவசரமாக படை விலகல் நடவடிக்கையை மேற்கொண்டார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச அரங்கில் அந்நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. இதை சரிக்கட்டும் விதமாகவே இந்த அதிரடி நடவடிக்கையை ஜோ பைடன் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பெண்களுக்கு விளையாட அனுமதியில்லை - தாலிபான் உத்தரவு