மருத்துவர் அந்தோனி ஃபௌசி கரோனா சூழலில் சரியாக செயல்படவில்லை என்று தேர்தல் பரப்புரையின்போது விமர்சித்த ட்ரம்ப், அவரை பணிநீக்கம் செய்யப்போவதாகவும் அச்சுறுத்தினார். முகக்கவசம் அணிவது தொடர்பான ட்ரம்பின் கருத்தை ஃபௌசி கடுமையாக விமர்சித்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில், அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், ஃபௌசிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்.
மருத்துவ நிபுணரை அச்சுறுத்திய ட்ரம்ப் - ஆதரவுக்கரம் நீட்டிய பிடன்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அச்சுறுத்திய தொற்று நோய் நிபுணர் அந்தோனி ஃபௌசி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.
Biden defends Fauci
இதுகுறித்து பிடன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஃபௌசி போன்ற மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை ஏற்கக்கூடிய பிரதமர் நமக்கு தேவை என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தேர்தல் பரப்புரையின் கடைசி நாளான இன்று, ட்ரம்ப் அதிபராக முக்கிய காரணமாய் இருந்த மாகாணங்களான பென்சில்வேனியா, ஒஹியோ ஆகிய இடங்களில் ஜோ பிடன் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.