அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3ஆம் தேதி (நேற்று) நடைபெற்றதைத் தொடர்ந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ட்ரம்புக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. வெற்றி பெறுவதற்கு 270 எலக்டோரல் வாக்குகள் தேவைப்படும் நிலையில், மிச்சிகன், விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் ஜனநாயகக் கட்சி முன்னிலை வகிக்கிறது.
வெள்ளை மாளிகையை நோக்கி பிடன்? முக்கிய மாகாணங்களில் கடும் போட்டி! - வெள்ளை மாளிகை
வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், மிச்சிகன், விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் ஜனநாயக, குடியரசுக் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவிவருகிறது.
நெவாடா மாகாணத்தில் 49.2 வாக்குகளைப் பெற்று பிடன் வெற்றி முகத்தில் உள்ளார். வடக்கு கரோலினா, ஜார்ஜியா, பெனிசில்வேனியா ஆகிய மாகாணங்களில் குடியரசுக் கட்சி முன்னிலை வகிக்கிறது. அரிசோனா, மைனே ஆகிய மாகாணங்களில் ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இதற்கிடையே, சட்டவிரோதமாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருதாகவும் அதனைத் தடுக்க உச்ச நீதிமன்றம் செல்வேன் எனவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடைசி வாக்கை எண்ணும்வரை ஓய்வெடுக்க மாட்டோம் எனவும் முடிவுகள் குறித்த உண்மையான விவரங்களுக்கு எனது பரப்புரை மேலாளர் ஜென் ஓ'மல்லி தில்லனின் இணைய பக்கத்தைப் பார்க்கவும் எனவும் பிடன் தெரிவித்துள்ளார்.