செப்டம்பர் 30ஆம் தேதியோடு இந்த ஆண்டுக்கான நிதி நிறைவடைய இருப்பதால் அரசு பணிநிறுத்ததை அறிவிக்க ஜோ பைடன் அரசு திட்டமிட்டுள்ளது என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜென் சகி, நிதி மேலாண்மை அலுவலகம் அரசு பணிநிறுத்தத்தை முறையாக செய்ய திட்டமிட்டுள்ளது. இன்னும் 7 நாட்களுக்குள் இதற்கான திட்டமிடுதலை செய்ய இருக்கிறோம். கரோனா சூழலில் இந்த அரசு பணிநிறுத்தம் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியும்; பொருளாதார மீட்டெடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள பைடன் அரசு திட்டமிட்டுள்ளது.