தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஏமன் போரில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு முட்டுகட்டை போட்ட நாடாளுமன்றம் - senate

வாஷிங்டன்: ஏமன் உள்நாட்டுப் போரில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு எதிரான தீர்மானத்தை அந்நாட்டு நாடாளுமன்ற கீழ்சபை நிறைவேற்றியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றம்

By

Published : Apr 5, 2019, 9:01 PM IST

மத்திய கிழக்கு நாடான ஏமனின், ஹவுட்டி (Houti) கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்றது வருகிறது.

ஆயிரக்கணக்கானோர் பலியாவதற்கு காரணமான இந்தப் போரில், ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடுகள் ராணுவ உதவி வழங்கி வருகின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல், அமெரிக்கா அரசு தன் பங்கிற்கு போர் விமானங்களுக்கான எரிபொருள், ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை அளித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் இந்த தலையீட்டுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்ற கீழ் சபையில் (House of Representatives) தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக 247 பேரும், எதிராக 175 பேரும் வாக்களித்து நிறைவேற்றியுள்ளனர்.

முன்னதாக, மார்ச் மாதம் இந்த தீர்மானமானது அமெரிக்க நாடாளுமன்ற மேல் சபையான செனட்டில் (Senate) 54க்கும் 46 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம், வெளிநாடுகளில் அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்தும் அந்நாட்டு அதிபரின் அதிகாரத்துக்கு முட்டுக்கட்டை போடும் போர் அதிகாரம் சட்டத்திற்கிணங்க ( War Powers Act, 1973 ) நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் செயல்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.

ABOUT THE AUTHOR

...view details