செப்டம்பர் 11, 2003 - யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடக்கூடிய தேதியல்ல. சர்வதேச அளவில் பயங்கரவாதத்தின் அட்டூழியத்தை அனைவரும் உணர்ந்த நாள். பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிவாங்கிய அமெரிக்காவில் புகழ்பெற்ற இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நாள். பயங்கரவாதத்துக்கு எதிராகவும் ஒசாமா பின்லேடனுக்கு எதிராகவும் அமெரிக்க தொடுத்த போரின் தொடக்கம்தான் இந்த இரட்டை கோபுர தகர்ப்பு.
சுமார் 10 ஆண்டு நீடித்த இந்தப் போர், 2011ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி முடிவுக்கு வந்தது. பல ஆண்டாக அமெரிக்காவுக்கு ஆட்டம் காட்டிய ஒசாமா பின்லேடனை அமெரிக்கக் கடற்படையின் சீல்ஸ் சிறப்புக் குழுவினர் பாகிஸ்தானுக்கே சென்று சுட்டுத்தள்ளினர். இது அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவின் செல்வாக்கைப் பலமடங்கு உயர்த்தியது. 2008ஆம் ஆண்டின் கடும் பொருளாதார மந்தநிலையையும் தாண்டி ஒபாமா இரண்டாம் முறை ஆட்சி பீடத்தில் அமர காரணமாகவும் அமைந்தது.
பயங்கரவாதம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது என்று ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்குள் ஐஎஸ் அமைப்பும் அதன் தலைவன் அபுபக்கரும் அசுர வேகத்தில் மக்களை அழித்து வந்தார்கள். பல ஆண்டு நீடித்த அந்தப் போராட்டத்தையும் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.