கரோனா வைரஸ் பாதிப்புகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்து 80 ஆயிரத்து 922ஆக அதிகரித்துள்ளது. இந்தக் கொடூரமான வைரஸிற்கு 2 லட்சத்து 83 ஆயிரத்து 868 பேர் உயிரிழந்தனர்.
இந்தக் கரோனா வைரஸால் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் அந்நாடுகள் பொருளாதார பாதிப்புகளை சந்தித்துள்ளது. முதல்முதலாக கரோனா வைரஸ் கண்டறியப்பட்ட சீனாவில் பாதிப்புகள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருந்தாலும் இன்று காலை ஒருவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், மீண்டும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தென் கொரியாவைப் பொறுத்தவரையில் நேற்று 35 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் 29 பேர் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், 6 பேர் வெளிநாட்டினர் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் கொரியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 909ஆக அதிகரித்துள்ளது. அதில் இதுவரை 9 ஆயிரத்து 632 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனாவால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 67 ஆயிரத்து 638ஆகவும், ஸ்பெய்னில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 663ஆகவும், இத்தாலியில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 183ஆகவும் உள்ளது.
இதையும் படிங்க:கரோனா வைரஸூக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4,200 பேர் உயிரிழப்பு