அமெரிக்காவின் சான் டியாகோ உயிரியல் பூங்காவில் உள்ள குரங்குகளுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், பூங்காவில் உள்ள ஒன்பது குரங்குகளுக்கு நேற்று கரோனா தடுப்பூசி போடப்பட்டதாகப் பூங்கா நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். நான்கு ஒராங்குட்டான், ஐந்து போனபோஸ் வகை குரங்குகளுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த குரங்குகளுக்காக, பிரத்யேகமாக கரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசிய போட்டுக்கோ.... ஜாலியான சான் டியாகோ குரங்குகள் - சான் டியாகோ உயிரியல் பூங்கா
சான் டியாகோ உயிரியல் பூங்காவில் உள்ள ஒன்பது குரங்குகளுக்கு, கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்புக்குள்ளான பூங்கா நிர்வாகியிடமிருந்துதான் குரங்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. கொரில்லாக்களுக்கு லேசான இருமல், சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்துள்ளன.தற்போது, மருத்துவச் சிகிச்சையின் பலனாகக் குரங்குகள் குணமடைந்துவிட்டதாகப் பூங்கா நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அதே போல, பல வன உயிரியல் பூங்காக்களில் விலங்குகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'குஜராத்தில் 2 ஆண்டுகளில் 313 சிங்கங்கள் இறந்துள்ளன' - அமைச்சர் தகவல்