மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தின் சாண்டா மரியா பகுதியில் கடந்த வாரம் சனிக்கிழமை விளைநிலத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியைடந்துள்ளனர். தொடக்கத்தில் ஒரு சில மீட்டர் அளவு மட்டுமே இருந்த பள்ளமானது, தொடர்ந்து பெரிதாகி கொண்டே கிட்டத்தட்ட 70 ஆயிரம் சதுர அடி வரை விரிந்து விவசாய நிலத்தை விழுங்கி ஒரு பெரிய வட்ட வடிவில் உள்ளது.
தற்போது சுமார் 300 அடி அகலமும், 60 அடி ஆழமும் கொண்டுள்ள இந்த பள்ளமானது மேலும் பெரிதாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு இங்கு பெரிய அளவிலான குளம் ஒன்று இருந்ததாகவும் அதை ஜாகே என்று அழைத்ததாகவும் உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.