தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

விர்ஜினியாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11 பேர் பலி! - gun shooting

அமெரிக்கா: விர்ஜினியா கடற்கரை அருகே அரசு அலுவலகங்கள் நிறைந்த பகுதியில் நடைபெற்ற மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதலில் ஈடுபட்டதில் 11 பேர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா

By

Published : Jun 1, 2019, 10:26 AM IST

அமெரிக்காவின் விர்ஜினியா கடற்கரை அருகே அரசு அலுவலகங்கள் நிறைந்த பகுதியில் திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதலில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிஜினியாவில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவத்தில் 12 பேர் பலி

இதுகுறித்து போலிஸார் கூறுகையில், விரக்தியின் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்திருக்கிறது. இந்த தாக்குதலில் காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் இருவர் ஆபத்தான் நிலையில் உள்ளனர் எனத் தெரிவித்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர், போலீஸாருடன் நடைபெற்ற சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details