அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் டாலஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் நிறைந்துள்ள பகுதியில், பலத்த காற்று வீசிய சமயத்தில் ராட்சத கிரேன் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.
ராட்சத கிரேன் விழுந்து விபத்து - ஒருவர் பலி! - crane collapse
வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ராட்சத கிரேன் விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
ஒருவர் பலி
தகவலறிந்து விரைந்த வந்த தீயணைப்புத் துறை இடிபாடுகளில் காயங்களுடன் சிக்கித் தவித்தவர்களை பத்திரமாக வெளியேற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் இதுவரை ஒருவர் பலியாகியுள்ளதாகவும், ஆறு பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தீயணைப்புத் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.