தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உலகின் 3ஆவது பெரிய வைரம்: அந்த நாட்டிற்கு மீண்டும் அதிர்ஷ்டம்!

உலகின் மூன்றாவது பெரிய வைரம் போஸ்வானா நாட்டில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Botswana
போஸ்வானா

By

Published : Jun 18, 2021, 8:41 AM IST

கேபரான்: 1095ஆம் ஆண்டில்தான் தென் ஆப்ரிக்க நாட்டில் உலகின் மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 கேரட் அளவு கொண்டதாகும்.

அதன் பின்னர், இரண்டாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் 2017ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 1,109 கேரட் அளவு ஆகும்.

இந்நிலையில், 1,098 காரட் அளவுடன் உலகின் மூன்றாவது பெரிய வைரம் போஸ்வானா நாட்டிலேயே மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது பெரிய வைரம்

73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் தடிமனும் கொண்டுள்ள இந்த வைரக்கல் கடந்த 1ஆம் தேதி அரசு துணையுடன் இயங்கும் டப்ஸ்வானா என்ற நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.

விரைவில் ஏலம்

பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வைரக்கல்லை கரோனா காலம் முடிவடைந்த பின்னர் ஏலம்விட போஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது.

மூன்றாவது மிகப்பெரிய வைரக்கல்லை போட்ஸ்வானா அதிபர் மோக்விட்சி கையில் வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க:'இது ஸ்பைடர் லேண்ட்' - விளைநிலத்தைப் போர்த்திய சிலந்தி வலை

ABOUT THE AUTHOR

...view details