துனிசியா நாட்டின் தலைநகர் துனிஸில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் இருவர், பர்தா அணிந்துகொண்டு கடந்த வாரம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், காவல்துறை அலுவலர் ஒருவர் பலியானார். பொதுமக்கள் ஏராளமானோர் காயமடைந்தனர்.
அரசு அலுவலகங்களில் பர்தா அணிய தடை: துனிசியா அரசு - நிக்கா
துனிஸ்: பாதுகாப்பு காரணங்களுக்காக துனிஸியாவில் உள்ள அரசு அலுவலகங்கள், நிறுவனங்களில் பர்தா அணிவதற்குத் தடை விதித்து அந்நாட்டு அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.
tunisia
இந்நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக அரசு அலுவலகங்கள், நிறுவனங்களில் பர்தா அணிய தடை விதித்து அந்நாட்டு அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.
2015ஆம் ஆண்டு, வடக்கு ஆப்ரிக்கா பகுதிகளில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்றதை அடுத்து, லிபியாவில் அவசரநிலை பிரகடனம் அமலில் உள்ளது.