தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சூடான் விவகாரம் - போராட்டகாரர்களை குறிவைக்கும் ராணுவம்!

கார்டூம்: சூடானில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் தொடர் போராட்டத்தை, கலைக்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டகாரர்களை குறிவைக்கும் ராணுவம்

By

Published : Apr 30, 2019, 1:10 PM IST

சூடானில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்த ஒமர் அல் பஷீரை, அந்நாட்டு ராணுவம் அதிரடியாக ஏப்ரல் 11ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தது. இதனால், அவருக்கு எதிராகப் போராடிய மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு ராணுவம் ஆட்சியை கவனிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் தலைநகர் கார்டூமில் உள்ள ராணுவ தலைமையகம் முன்பு கடந்த சில வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, போராட்டக்காரர்களிடம் ராணுவம் நடத்திய பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததையடுத்து, போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக சூடானிய வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், "பாதுகாப்பு வேலியை ராணுவத்தினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். நாட்டு மக்கள் அனைவரும் எங்களது அழைப்பை ஏற்று போராட்டத்தை தீவிரப்படுத்த ஆதரவு அளிக்க வேண்டும். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியும், அவர்களது சொத்துக்களை கைப்பற்றியும் ராணுவம் அட்டுழியத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் நாட்டின் அமைதியை சீர்குலைக்கிறது. ஆட்சி அமையும் வரை போராட்டம் தொடரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details