தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசாவுக்கு கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு கோவிட் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதிபர் சிரிலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவர் தைரியத்துடன் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிபர் சிரில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியவர்.
அன்மையில், மேற்கு ஆப்ரிக்க நாடுகளான நைஜீரியா, கானா, செனகல் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டார். தனது உடல் நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் சிரில், தனது பாதிப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை எனவும், பெருந்தொற்று விவகாரத்தில் யாரும் அலட்சியம் காட்ட வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.