தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இளவரசர் ஹாரியின் இரண்டாவது நாள் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம்! - meghan

பிரிட்டன் இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் தங்களது இரண்டாவது நாள் சுற்றுப்பயணமாக தென் ஆப்பிரிக்காவில் உள்ள பழமையான மசூதிக்கு சென்றனர்.

இளவரசர் ஹாரி

By

Published : Sep 25, 2019, 6:47 PM IST

தங்கள் முதல் வாரிசு ஆர்ச்சி பிறந்ததும் முதல் சுற்றுப்பயணமாக தென் ஆப்பிரிக்கா சென்ற இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் 225 ஆண்டுகள் பழமையான அவ்வல் மசூதிக்கு சென்றனர்.

இந்த இரண்டாவது நாள் சுற்றுப்பயணத்தின் போது அங்குள்ள மக்களுடன் இளவரசரும், அவரது மனைவியும் பேசி மகிழ்ந்து, அவர்களது வீட்டில் இருவரும் உணவு உட்கொள்வது போன்ற புகைப்படங்கள் பரவலாக பேசப்பட்டன.

இதற்கு முந்தைய நாளில் இருவரும் கேப் டவுனில் உள்ள ஒரு கடற்கரையில் மன நலம் குன்றிய இளையோருக்கு உதவி புரியும் ஒரு என் ஜி ஓ குழுவுடன் கலந்தாலோசித்தனர்.

மேலும் லஞ்ச் பாக்ஸ் எனப்படும் பொது மக்களிடம் நன்கொடை பெரும் நிதி நிறுவனத்தை பற்றியும் தெரிந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details